வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8.77 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம்: ஒரு லட்சம் தேங்காய்கள் ஏலம்
வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.77 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரைவாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8.77 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம்: ஒரு லட்சம் தேங்காய்கள் ஏலம்
வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.77 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.77 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை வேளாண் விற்பனைக் குழுவின் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 24 விவசாயிகள், மொத்தம் 1,10,820 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவை, 43 குவியல்களாகப் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.
இதில், அதிகபட்சமாக ரூ.10.16-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6.30-க்கும் என ஏலம் போனது. இதன்மூலம், ரூ.8.77 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம் நடைபெற்றுள்ளது. மேலும், 599 கிலோ கொப்பரை தேங்காயும் ஏலம் விடப்பட்டது.