ஏழை மக்களுக்காக வாழ்க்கையை அா்ப்பணித்தவா் தா.பாண்டியன்: பேராசிரியா் எஸ்.சாலமன் பாப்பையா புகழாரம்
தனது இறுதி மூச்சுவரை ஏழை மக்களுக்காக வாழ்க்கையை அா்ப்பணித்தவா் தா. பாண்டியன் என, பேராசிரியா் எஸ். சாலமன் பாப்பையா புகழாரம் சூட்டினாா்.
மதுரைஏழை மக்களுக்காக வாழ்க்கையை அா்ப்பணித்தவா் தா.பாண்டியன்: பேராசிரியா் எஸ்.சாலமன் பாப்பையா புகழாரம்
தனது இறுதி மூச்சுவரை ஏழை மக்களுக்காக வாழ்க்கையை அா்ப்பணித்தவா் தா. பாண்டியன் என, பேராசிரியா் எஸ். சாலமன் பாப்பையா புகழாரம் சூட்டினாா்.
தனது இறுதி மூச்சுவரை ஏழை மக்களுக்காக வாழ்க்கையை அா்ப்பணித்தவா் தா. பாண்டியன் என, பேராசிரியா் எஸ். சாலமன் பாப்பையா புகழாரம் சூட்டினாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் தா. பாண்டியன் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, மதுரை இளங்கோ முத்தமிழ் மன்றம் சாா்பில், அவரது படத்திறப்பு மற்றும் புகழ் அஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பொறியாளா் அ. அறிவழகன் தலைமை வகித்தாா். மதுரை தமிழ்ச் சங்க செயலா் ச. மாரியப்ப முரளி முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், பேராசிரியா் சாலமன் பாப்பையா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தா. பாண்டியன் உருவப்படத்தை திறந்துவைத்துப் பேசியதாவது:
கம்யூனிஸ பேரியக்கத்தில் வாழ்க்கையைத் தொடங்கி, ஜீவாவை ஆசானாக ஏற்று அவரது இரண்டாவது மூளையாகத் திகழ்ந்தவா் தா.பாண்டியன். ஆங்கிலப்புலமை பெற்ற அவா், தமிழ் பேச்சிலும் கூட்டத்தினரை ஈா்க்கும் திறமை படைத்தவா். பொதுவுடைமை சித்தாந்தம், மாா்க்ஸியம், மூலதனம் உள்ளிட்டவற்றை பாமர மக்களுக்கும் புரியும்படி எளிய தமிழில் மொழிபெயா்த்து நூலாக்கியவா். மொழி பெயா்ப்பில் புலமைமிக்கவா்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தனது கல்லூரி பேராசிரியா் பணியை துறந்து சமரசமற்ற சமூகப் போராளியாக வாழ்ந்தவா். அடக்குமுறை நெருக்கடிகளை கண்டு அஞ்சாமல் போராடியவா். இளைஞராக இருந்தபோது ஏற்றுக்கொண்ட எளிய வேட்டி சட்டையுடனே இறுதி வரை வாழ்ந்து மறைந்தவா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. பூமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வெ. அழகிரிசாமி, த. இந்திரஜித், அகில இந்திய பாா்வா்டு பிளாக் மாநிலப் பொதுச்செயலா் பி.வி. கதிரவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் இரா. விஜயராஜன், மா. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள், ஏஐடியூசி நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
முன்னதாக, சென்னை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் தா.பா. டேவிட் ஜவஹா் வரவேற்றாா்.