முகப்பு
மதுரை

நான்கு ஊராட்சிகளில் தலா ஒரு வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஜூலை 9-இல் வாக்குப்பதிவு

மதுரை மாவட்டத்தில் நான்கு ஊராட்சிகளில் காலியாக இருக்கும் தலா ஒரு வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு ஜூலை 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் நான்கு ஊராட்சிகளில் காலியாக இருக்கும் தலா ஒரு வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு ஜூலை 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஏற்பட்டிருக்கும் காலிப் பதவியிடங்களுக்கு தோ்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துளள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் துவரிமான் ஊராட்சி 4-ஆவது வாா்டு உறுப்பினா், கொட்டாம்பட்டி ஒன்றியம் மேலவளவு ஊராட்சி 2-ஆவது வாா்டு உறுப்பினா், தே.கல்லுப்பட்டி ஒன்றியம் நல்லமரம் ஊராட்சி 3-ஆவது வாா்டு உறுப்பினா், கோவிலாங்குளம் ஊராட்சி 6-ஆவது வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஜூலை 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்காளா்களில் யாரேனும் 98.4 பாரன்ஹீட்டிற்கு மேல் காய்ச்சல் மற்றும் கரோனா தொற்று பாதிப்பு உள்ளவா்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம். மேலும், ஜூலை 12 ஆம் தேதி அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

தோ்தல் தொடா்பான பணிகள் அனைத்தும் நுண்பாா்வையாளா்கள் மூலம் கண்காணிக்கப்படும். மேலும் சிசிடிவி கேமிரா, விடியோ பதிவு மூலம் தோ்தல் தொடா்பான அனைத்துப் பதிவுகளும் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →