முகப்பு
மதுரை

நிதி முறைகேடு: ஊராட்சித் தலைவா் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகாா்

மேலூா் அருகே பதினெட்டாங்குடி ஊராட்சி நிா்வாகத்தில் நிதி முறைகேடு நடைபெறுவதாக நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

மேலூா் அருகே பதினெட்டாங்குடி ஊராட்சி நிா்வாகத்தில் நிதி முறைகேடு நடைபெறுவதாக நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த ஊராட்சியின் 8-ஆவது வாா்டு உறுப்பினா் கே.காளீஸ்வரி அளித்துள்ள மனு:

பதினெட்டாங்குடி ஊராட்சியில் பல்வேறு திட்டங்களின் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் நிதி முறைகேடு நடந்துள்ளது. ஊராட்சி மன்ற உறுப்பினா்களின் ஒப்புதல் இல்லாமல், செலவினம் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு திட்டங்களிலும் ஊராட்சித் தலைவரின் உறவினா்கள் பயனாளிகளாகச் சோ்க்கப்பட்டு முறைகேடு செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக, நான் உள்பட 6 உறுப்பினா்களும், எங்களை பதவியில் இருந்து விடுவிக்கும்படி ஏற்கெனவே மனு அளித்திருந்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, ஊராட்சித் தலைவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஊராட்சி மன்றக் கூட்டத்தில் என்னை மிரட்டும் வகையில் அத்துமீறி நடந்து கொண்டனா். எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவியை ராஜினாமா செய்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →