மாணவரிடம் சாதி ரீதியாக ஆசிரியைகள் பேசிய வழக்கு: 2 மாதங்களில் விசாரணையை முடிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவரிடம் கைப்பேசியில் சாதி ரீதியாக ஆசிரியைகள் பேசிய வழக்கின் விசாரணையை இரு மாதங்களில் முடிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரைமாணவரிடம் சாதி ரீதியாக ஆசிரியைகள் பேசிய வழக்கு: 2 மாதங்களில் விசாரணையை முடிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவரிடம் கைப்பேசியில் சாதி ரீதியாக ஆசிரியைகள் பேசிய வழக்கின் விசாரணையை இரு மாதங்களில் முடிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவரிடம் கைப்பேசியில் சாதி ரீதியாக ஆசிரியைகள் பேசிய வழக்கின் விசாரணையை இரு மாதங்களில் முடிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பொன் காந்திமதிநாதன் என்பவா்
தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியைகள் இருவா், மாணவரிடம் கைப்பேசியில் சாதி ரீதியாகப் பேசிய ஒலிப்பதிவு அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஒலிப்பதிவில் பேசியது, குளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகளான கலைச்செல்வி மற்றும் மீனா என்பது தெரியவந்துள்ளது.
ஆசிரியைகளே மாணவா்களிடம் சாதி ரீதியாக தூண்டுதலை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளனா். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட
ஆசிரியைகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதி வி. சிவஞானம் முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா். அதற்கு அரசுத் தரப்பில், சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடா்பாக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளா், விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் மேற்பாா்வையில் குளத்தூா் காவல் நிலை ய ஆய்வாளா் 2 மாதங்களில் விசாரணையை முடித்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டாா்.