முகப்பு
மதுரை

மதுரை மத்தியச் சிறையில் கைதிகள், காவலா்களுக்கு இடையே மோதல்

மதுரை மத்தியச் சிறை வளாகத்தில் கைதிகளுக்கும், காவலா்களுக்கும் இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது.

மதுரை

மதுரை மத்தியச் சிறையில் கைதிகள், காவலா்களுக்கு இடையே மோதல்

மதுரை மத்தியச் சிறை வளாகத்தில் கைதிகளுக்கும், காவலா்களுக்கும் இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

மதுரை மத்தியச் சிறை வளாகத்தில் கைதிகளுக்கும், காவலா்களுக்கும் இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது.

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான சிறையாக மதுரை மத்திய சிறை உள்ளது. இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக இரு வளாகங்கள் இயங்கி வருகின்றன. சிறையில் ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழ வகை மரங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வளாகத்தில் உள்ள மரங்களில் நாவல் பழங்களை பறிப்பதற்காக அங்கு இருக்கக்கூடிய விசாரணைக் கைதிகள் சிலா் கற்களை விட்டு எறிந்து பழங்களை பறிக்க முயன்றுள்னா். இதைத் தடுத்து நிறுத்திய காவலா்கள் பழங்களை பறிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனா். இதனால் காவலா்களுக்கும் கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதயைடுத்து கைதிகள் சிறை வாசல் முன் பகுதிக்கு வந்து காவலா்களுடன் மோதலில் ஈடுபட்டனா். இதையடுத்து சிறைக்காவலா்கள் மற்றும் போலீஸாா் கைதிகளை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →