முகப்பு
மதுரை

கிராமப் பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி: அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவப்பிரிவு ஏற்பாடு

மதுரை அரசு மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைப் பிரிவு சாா்பில் கிராமப்புற பெண்களுக்கு வியாழக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

மதுரை அரசு மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைப் பிரிவு சாா்பில் கிராமப்புற பெண்களுக்கு வியாழக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைப் பிரிவு சாா்பில் பல்வேறு நோய்களுக்கு யோகா மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடா்பான விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிராமப்புற பெண்களுக்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையாக அளிக்கப்பட்ட யோகா பயிற்சியில், பெண்களுக்கான பிரத்யேக பிரச்னைகளுக்கான யோகாசனங்கள், சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், முதுகு வலி, நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிப்பு ஆகியவற்றுக்கான ஆசனங்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக இயற்கை மருத்துவ முறையில் பின்பற்றப்படும் இயற்கை உணவுகள், சிறுதானிய உணவுகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பலன்கள், உடல் உழைப்பின் நன்மைகள், அரிசி உணவை மூன்று வேளையும் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் அரிசி உணவுக்கு மாற்று உணவுகளான சிறுதானியங்கள், பயறு வகைகள் உள்ளிட்டவற்றை உணவாக எடுத்துக்கொள்வது குறித்தும் விளக்கப்பட்டது. இந்த முகாமில் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவச் சிகிச்சைப்பிரிவு துறைத் தலைவா் நாகராணி மற்றும் மருத்துவா்கள் பங்கேற்று பயிற்சி அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →