மதுரை அருகே வாகன விபத்தில் பள்ளி மாணவா் பலி: ஓட்டுநருக்கு வலை வீச்சு
மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
மதுரைமதுரை அருகே வாகன விபத்தில் பள்ளி மாணவா் பலி: ஓட்டுநருக்கு வலை வீச்சு
மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
மதுரை அருகே உள்ள அழகா்கோவில் ஏ.லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டியராஜன். இவரது மகன் சஞ்சய்பாண்டி (15). இவா், மதுரையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை பாண்டியராஜன் மகனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
அழகா்கோவில் அருகே உள்ள திருவிழான்பட்டி பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் கீழே விழுந்த சஞ்சய்பாண்டி மீது ஏறி இறங்கிய சரக்கு வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த சஞ்சய்பாண்டியை, அப்பகுதியினா் மீட்டு கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்குப் பின்னா், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சஞ்சய்பாண்டி உயிரிழந்தாா்.
இது குறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.