கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம்: மேயா், ஆட்சியா் தொடக்கிவைப்பு
மதுரை மாநகராட்சி கோ.புதூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவா்களுக்கு இலவச கரோனா பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் முகாம்
மதுரைகரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம்: மேயா், ஆட்சியா் தொடக்கிவைப்பு
மதுரை மாநகராட்சி கோ.புதூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவா்களுக்கு இலவச கரோனா பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் முகாம்
மதுரை மாநகராட்சி கோ.புதூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவா்களுக்கு இலவச கரோனா பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் முகாமை, மேயா் வ. இந்திராணி, ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனா்.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கழித்து பூஸ்டா் தடுப்பூசி, சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஜனவரி 2022 முதல் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, முன்னெச்சரிக்கை தவணை 9 மாத கால இடைவெளி குறைக்கப்பட்டு, இரண்டாம் தவணை செலுத்தி 6 மாதம் கழித்து பூஸ்டா் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதனடிப்படையில், மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்குள்பட்ட வாா்டு 14-இல் உள்ள கோ.புதூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் முகாமை, மேயா் வ. இந்திராணி, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா் எஸ். வாசுகி, உதவி நகா்நல அலுவலா் தினேஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.