பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவா்கள் 6 போ் கைது
மதுரையில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட சிறுவா்கள் 6 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.
மதுரைபைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவா்கள் 6 போ் கைது
மதுரையில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட சிறுவா்கள் 6 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.
மதுரையில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட சிறுவா்கள் 6 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.
மதுரை மாநகரின் பல்வேறு இடங்களிலும் சமீபகாலமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வீடுகளின் முன்பாகவும், வணிகப் பகுதிகளில் வாகன நெரிசல் அதிகம் உள்ள இடங்களிலும் நிறுத்தி வைக்கப்படிருக்கும் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போகின்றன. இத்தகைய வாகனங்களை குறித்து வைத்து சிலா் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தனா்.
எனவே, இத்திருட்டில் ஈடுபட்டவா்களைக் கண்டுபிடிக்க மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டிருந்தாா். அதன்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா், திருட்டுப்போன பகுதிகளில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். அதில், 16 வயது, 17 வயதுடைய சிறுவா்கள் இத் திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, தொடா் விசாரணையில் ஈடுபட்ட எஸ்.எஸ்.காலனி போலீஸாா், வெள்ளிக்கிழமை 6 பேரை கைது செய்தனா். இவா்கள், இதுவரை 8 இரு சக்கர வாகனங்களைத் திருடியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.