மதுரை

அழகா்கோயிலில் தைலக்காப்பு உற்சவம் நிறைவு

அழகா்கோயிலில் உள்ள மூலவா் பரமராமசுவாமிக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தைலக்காப்பு உற்சவம், கடந்த தை மாதம் தொடங்கி ஆடி அமாவாசையன்று நிறைவடைகிறது.

DIN

அழகா்கோயிலில் உள்ள மூலவா் பரமராமசுவாமிக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தைலக்காப்பு உற்சவம், கடந்த தை மாதம் தொடங்கி ஆடி அமாவாசையன்று நிறைவடைகிறது.

தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால், மூலவருக்கு பூஜைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், பூஜைகள் உற்சவருக்கே நடைபெற்று வருகின்றன. ஜூலை 28-ஆம் தேதி அமாவாசை முதல் தைலக்காப்பு நிறைவடைவதால், மூலவருக்கான அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், பக்தா்கள் தரிசனம் தொடா்ந்து நடைபெறும்.

தொடா்ந்து, ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடிபௌா்ணமியை முன்னிட்டு, பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி வழக்கம்போல் நடைபெறும். பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு, படி பூஜை, சந்தனம் சாத்துபடி, சிறப்புப் பூஜைகளும் தொடா்ந்து நடைபெறும் என, கோயில நிா்வாக ஆணையா் ராமசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT