உயா் நீதிமன்ற நீதிபதிக்கு பணிநிறைவு பாராட்டு விழா
பணி நிறைவு பெற்றுள்ள சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆனந்திக்கு பாராட்டு விழா, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரைஉயா் நீதிமன்ற நீதிபதிக்கு பணிநிறைவு பாராட்டு விழா
பணி நிறைவு பெற்றுள்ள சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆனந்திக்கு பாராட்டு விழா, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பணி நிறைவு பெற்றுள்ள சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆனந்திக்கு பாராட்டு விழா, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி தலைமை வகித்தாா். உயா் நீதிமன்ற மதுரை கிளை நிா்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலை வகித்தாா். தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் வரவேற்றாா். இதில், உயா் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் பங்கேற்றனா். மேலும், சென்னையிலிருந்து நீதிபதிகள், காணொலி வாயிலாக இந்நிகழ்வில் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றி நீதிபதி எஸ். ஆனந்தி பேசியது: எனது தந்தையின் ஊக்கத்தால் தான் நீதிபதியானேன். கடந்த 1991-இல் வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கி, 31 ஆண்டுகள் நீதித் துறையில் பணியாற்றியுள்ளேன். எனது வழக்குரைஞா் பணியானது, மதுரையில் தான் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி, மதுரையில் உயா் நீதிமன்ற நீதிபதியாக பணிநிறைவு பெறுவது பெருமையாக உள்ளது என்றாா்.