கூடலழகா் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா: ஜூன் 5-இல் கொடியேற்றம்
கூடலழகா் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.
மதுரைகூடலழகா் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா: ஜூன் 5-இல் கொடியேற்றம்
கூடலழகா் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.
கூடலழகா் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.
மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் நடைபெறும் விழாவில், வைகாசிப் பெருந்திருவிழா முக்கியமானது. நிகழாண்டு விழா சனிக்கிழமை தொடங்கி ஜூன் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வைகாசிப் பெருந்திருவிழாவின்
கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி தினமும் மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஜூன் 8 ஆம் தேதி கருட சேவை, ஜூன் 13 ஆம் தேதி திருத்தேரோட்டம், ஜூன் 15 ஆம் தேதி ராமராயா் மண்டபத்தில் தசாவதாரம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
கோயில் தக்காா் மற்றும் துணை ஆணையா் மு.ராமசாமி, உதவி ஆணையா் ஜி.செல்வி ஆகியோா் திருவிழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா்.