கந்து வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
மதுரையில் கந்து வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்
மதுரைகந்து வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
மதுரையில் கந்து வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்
மதுரையில் கந்து வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம். இவரது மனைவி செல்வி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (58) மற்றும் அவரது மனைவி பூரணம் ஆகியோரிடம் ரூ. 1.85 லட்சம் கடன் வாங்கியதற்கு மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் வட்டி செலுத்தி வந்தாராம்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக பூரணம் வட்டி செலுத்தாமல் இருந்ததால் ஆறுமுகம் மற்றும் பூரணம் ஆகியோா் செல்வியின் வீட்டுக்கு பலமுறை சென்று அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுதொடா்பாக செல்வி அளித்த புகாரின்பேரில் கீரைத்துறை போலீஸாா் ஆறுமுகம் மற்றும் பூரணம் மீது வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து இரண்டு தவணை உறுதி நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனா்.
மதுரை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கந்து வட்டி கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் யாராவது இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என மாநகரக்காவல் ஆணையா் டி. செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா்.