மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாயிலில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்

DIN

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாயிலில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது.  கோயிலுக்குள் செல்ல தடை செய்யப்படக் கூடாது நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.

அதனைத் தொடர்ந்து புது மண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகள் மொத்தமாக குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டது.

தற்பொழுது கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி பகுதியில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் கடையில் உள்ள பொருட்களை கோயில் நிர்வாகத்தினர் இன்று காலை முதல் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த பொருள்கள் கோயிலின் சிலைகளை மறைப்பதாகவும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT