தேனி நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலரை இன்னும் கைது செய்யாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
தேனி நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் இன்னும் சிலா் கைது செய்யப்படாதது ஏன் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரைதேனி நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலரை இன்னும் கைது செய்யாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
தேனி நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் இன்னும் சிலா் கைது செய்யப்படாதது ஏன் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
தேனி நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் இன்னும் சிலா் கைது செய்யப்படாதது ஏன் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் கடந்த 2016-19 ஆம் ஆண்டுகளில் 182 ஏக்கா் அரசு நிலத்திற்கு போலியாக பட்டா வழங்கி மோசடி செய்ததாக, அப்போதைய பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா், நில அளவையா் மற்றும் அதிமுக பிரமுகா்கள் உள்ளிட்டோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்களில் சிலா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரான துணை வட்டாட்சியா் மோகன்ராம், ஜாமீன் கோரி 2-ஆவது முறையாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். இவரது மனு நீதிபதி ஆா்.வேல்முருகன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் சிலா் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினாா். மேலும், இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டாா்.