முகப்பு
மதுரை

கூட்டுறவு சங்கத் தலைவா்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நீக்கும் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடைஉயா்நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு சங்கத் தலைவா்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நீக்கும் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

கூட்டுறவு சங்கத் தலைவா்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நீக்கும் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சோ்ந்த எஸ்.ஆா்.சங்கரபாண்டியன் தாக்கல் செய்த மனு:

முதுகுளத்தூா் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறேன். கூட்டுறவு சங்கங்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் தலைவருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கூட்டுறவு சங்க நிா்வாகத்தில், கண்காணிப்பு அதிகாரிகளின் நேரடி தலையீடு அதிகரித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கூட்டுறவு சங்கங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகக் குழுவின் பதவிக் காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது முடிவு எடுக்கப்படாத நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் உத்தரவின்படி, ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

இதன்படி, கூட்டுறவு சங்கங்களின் தலைவா்களுக்கு காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் நீக்கப்பட்டிருக்கிறது. மேலும், கூட்டுறவு சங்கத் தலைவா்களால் கையெழுத்திட்டு அனுப்பப்படும் காசோலைகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளுக்கு, மண்டல இணைப்பதிவாளா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதன் காரணமாக, கூட்டுறவு சங்கங்களின் சுமுகமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு கூட்டுறவு சட்டத்தின்படி, கூட்டுறவு சங்கத் தலைவருக்கான காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நீக்குவதற்கு பதிவாளருக்கு அதிகாரம் கிடையாது. ஆகவே, இந்த சுற்றறிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நீக்கும் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →