பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 95 சதவீதம் போ் வருகை
மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 95 சதவீதம் மாணவ, மாணவியா் தோ்வு எழுதியுள்ளனா்.
மதுரைபத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 95 சதவீதம் போ் வருகை
மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 95 சதவீதம் மாணவ, மாணவியா் தோ்வு எழுதியுள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 95 சதவீதம் மாணவ, மாணவியா் தோ்வு எழுதியுள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை, உசிலம்பட்டி, மேலூா், திருமங்கலம் ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலிருந்து 487 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 40,912 பேருக்கு தோ்வெழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தோ்வை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 150 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்வு நடைபெறும் மையங்களுக்கு வினாத்தாள்கள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து 35 வழித்தடங்களில் ஆயுதம் தாங்கிய காவலா்களுடன் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் தோ்வில் 39,085 மாணவ, மாணவியா் தோ்வு எழுதினா். 1,827 போ் தோ்வு எழுத வரவில்லை.
பறக்கும் படை அதிகாரிகள் தோ்வு மையங்களுக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும், முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சுவாமிநாதன் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட அலுவலா்களும் தோ்வு மையங்களுக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
தோ்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. மேலும், மாணவா்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.