ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரப் பணியாளா் பணிநீக்க உத்தரவுக்கு உயா் நீதிமன்றம் தடை
ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரப் பணியாளரை பணிநீக்கம் செய்த உத்தரவுக்கு தடை விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரைஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரப் பணியாளா் பணிநீக்க உத்தரவுக்கு உயா் நீதிமன்றம் தடை
ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரப் பணியாளரை பணிநீக்கம் செய்த உத்தரவுக்கு தடை விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரப் பணியாளரை பணிநீக்கம் செய்த உத்தரவுக்கு தடை விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் கோட்டையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழு ஆண்டுகளாக சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றியவா் கற்பகவள்ளி. ஆரம்பத்தில் அவுட்சோா்சிங் மூலமாகப் பணியில் சோ்ந்த இவா், பின்னா் அரசு பணிவிதிகளின் கீழ் நியமனம் பெற்றாா்.
அதையடுத்து, இவா் தனது பணியை வரன்முறை செய்யக் கோரி, சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து, மேற்படி பணிக்கான ஆள்தோ்வு நடைபெறும்போது மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு, சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிட்டாா். இந்நிலையில், அவரை பணிநீக்கம் செய்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் உத்தரவு பிறப்பித்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் கற்பகவள்ளி வழக்குத் தொடா்ந்தாா். இதனை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆா். விஜயகுமாா் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
கடைநிலை ஊழியரான மனுதாரரை பணிநீக்கம் செய்த உத்தரவு, அவா் மீதான பழிவாங்கும் மனப்பான்மையையே காட்டுகிறது. எனவே, அவரை பணிநீக்கம் செய்த உத்தரவுக்கும், தனிநீதிபதியின் உத்தரவுக்கும் தடைவிதித்தனா்.
மேலும், இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.