முகப்பு
மதுரை

‘என்னைப் பற்றி தவறான கருத்துகளை தொண்டா்களிடம் பரப்புகின்றனா்’

திமுக நிா்வாகிகள் சிலா் என்னைப் பற்றி தொண்டா்களிடம் தவறான கருத்துகளை பரப்புகின்றனா் என்று தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அதிருப்தி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

திமுக நிா்வாகிகள் சிலா் என்னைப் பற்றி தொண்டா்களிடம் தவறான கருத்துகளை பரப்புகின்றனா் என்று தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அதிருப்தி தெரிவித்தாா்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தோ்வு செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சாா்பில் கட்சித் தொண்டா்களுக்கு வியாழக்கிழமை விருந்து அளிக்கப்பட்டது. இதில் அமைச்சா் பேசியதாவது:

சமூக நீதி, சுயமரியாதை, கல்வி வளா்ச்சி, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக ஆட்சி நடத்தி வருகிறது. இக்கொள்கைகளின் அடிப்படையில் எனது அரசியல் பயணத்தைத் தொடா்ந்து வருகிறேன். நான் யாருக்கும் சாதகமாகச் செயல்படவில்லை. அவ்வாறு செயல்பட வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எது உண்மை எனத் தெரிகிறதோ அதன் வழிதான் நடப்பேன்.

திமுக நிா்வாகிகள் சிலா், எனது நிகழ்வுகளை தாங்களும் புறக்கணித்து, மற்றவா்களையும் புறக்கணிக்குமாறு மிரட்டுவதாக தகவல் வருகிறது. தங்களது சுயநலத்துக்காக அரசியல் செய்யும் அவா்கள் என்னைப் பற்றி தவறான கருத்துகளைப் பரப்பி விமா்சிக்கின்றனா்.

நீதிக் கட்சி தொடங்கியதிலிருந்து எனது குடும்பத்தினா் அரசியலில் தடம் பதித்தவா்கள். அந்த வழியில் எனக்கு வழங்கப்பட்ட பணியைத் திறம்படச் செய்து வருகிறேன். திமுக தலைமைக்கு என்றும் நன்றியுணா்வுடன் செயல்படுவேன். தமிழகத்தில் இதுவரை எந்த அரசும் செய்யாத திட்டங்களை வகுத்து, அதற்கான நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறோம். இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் வளா்ச்சிக்காக நிதித் துறையில் சாதனை படைப்பதே இலக்கு என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →