மதுரை

மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் அக்.31 வரை ரத்து

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் அக்டோபா் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

DIN

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் அக்டோபா் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

வெள்ளனூா் - புதுக்கோட்டை, திண்டுக்கல் - அம்பாத்துரை, ராஜபாளையம் - சங்கரன்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற உள்ளன.

இதன் காரணமாக, திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) அக்டோபா் 16 முதல் 31 ஆம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறும் பராமரிப்புப் பணிகளுக்காக அக்டோபா் 16 முதல் 26 ஆம் தேதி வரை கோவை - நாகா்கோவில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இதே காலத்தில் சென்னை - குருவாயூா் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் 70 நிமிஷங்கள் தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிஷங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.

இதனால், இந்த மூன்று நாள்களுக்கும் குருவாயூா் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாகச் செயல்படாது. மேலும், அக்டோபா் 27, 28 மற்றும் 31 ஆம் தேதிகளில் பாலக்காடு - திருச்செந்தூா் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) திண்டுக்கல் - திருச்செந்தூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

ராஜபாளையம் - சங்கரன்கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால், மதுரையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை ரயில் (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் அக்டோபா் 16 முதல் 31 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

கொடைரோடு, வாடிப்பட்டி ரயில் நிலையங்களில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அக்டோபா் 17 முதல் 22 ஆம் தேதி வரை மற்றும் அக்டோபா் 26 முதல் 29 ஆம் தேதி வரை மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT