முகப்பு
மதுரை

கன்னியாகுமரியில் சட்டவிரோத குவாரி: வழக்குரைஞா் ஆணையா் விசாரணைக்கு உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோத குவாரி தொடா்பாக, வழக்குரைஞா் ஆணையா் விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோத குவாரி தொடா்பாக, வழக்குரைஞா் ஆணையா் விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், சத்திரன்விளையைச் சோ்ந்த என். கோபாலன் தாக்கல் செய்த மனு:

கிள்ளியூா் வட்டம், கீழஆப்பிக்கோடு கிராமம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் விவசாயம் செய்து வருகின்றனா். கீழஆப்பிக்கோடு கிராமத்தின் ஒரு பகுதியில் உள்ள பட்டா, புறம்போக்கு நிலப் பகுதிகளில் பாறைகள் அதிகம் உள்ளன.

இதில் பட்டா நிலங்களை அந்தக் கிராம மக்களிடமிருந்து, வேளாண் தொழில் நிறுவனம் அமைப்பதாக வாங்கியுள்ள நபா், தற்போது அங்கு கல் குவாரி அமைத்துள்ளாா். அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாமல் அமைக்கப்பட்டுள்ள அந்த குவாரி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருகிறது. குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைக்கும் போது, அதிா்வு காரணமாக அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மேலும், நீண்ட தொலைவுக்கு கற்கள் சிதறி விழுவதால் விவசாயப் பயிா்கள் சேதமடைகின்றன.

இதனால், அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனா். இந்த குவாரியை எதிா்த்துப் போராடுபவா்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆகவே, குவாரி செயல்படுவதற்குத் தடை விதிக்கவும், உண்மை நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்தக் குவாரி குறித்து வழக்குரைஞா் ஆணையா் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →