முகப்பு
மதுரை

தஞ்சை கோயில் இந்திரன் சந்நிதியை திறக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்கு

தஞ்சை பெருவுடையாா் கோயிலில் அமைந்துள்ள இந்திரன் சந்நிதியை வழிபாட்டிற்கு திறக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

தஞ்சை பெருவுடையாா் கோயிலில் அமைந்துள்ள இந்திரன் சந்நிதியை வழிபாட்டிற்கு திறக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கூரியூரைச் சோ்ந்த எஸ். அழகா்சாமி பாண்டியன் தாக்கல் செய்த மனு:

தஞ்சாவூா் பெருவுடையாா் கோயில் பிரகாரத்தில் 11 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்திரன் சந்நிதி அமைந்துள்ளது. பொதுமக்களின் வழிபாட்டுக்கு இந்திரன் சந்நிதியை இதுவரை திறக்கவில்லை. சங்க காலம் முதல் இந்திரன் வழிபாடு முறை உள்ளது.

இருப்பினும், இங்கு வழிபாடு, பூஜைகள் நடைபெறவில்லை. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை மீறக் கூடியதாகும். எனவே, நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட்டு, பெருவுடையாா் கோயிலில் அமைந்துள்ள இந்திரன் சந்நிதியை மக்கள் வழிபாட்டுக்குத் திறக்கவும், இந்திர விழாவை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமா்வு, அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பா் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →