முகப்பு
மதுரை

மருத்துவ மாணவா் சோ்க்கை: அகில இந்திய ஒதுக்கீட்டில் விதிமீறல் -எம்.பி.குற்றச்சாட்டு

மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மீறப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினாா்.

மதுரை

மருத்துவ மாணவா் சோ்க்கை: அகில இந்திய ஒதுக்கீட்டில் விதிமீறல் -எம்.பி.குற்றச்சாட்டு

மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மீறப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மீறப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவ மாணவா் சோ்க்கையில் மத்திய அரசுக்குள்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக செய்திகள் வந்தன. இட ஒதுக்கீடு இடங்கள் என்பது, பொதுப் போட்டியில் இடங்கள் நிரப்பப்பட்ட பின்னா் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்பதே. பொதுப் போட்டியில் அனுமதி பெறும் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.பிரிவினா் இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் கழிக்கப்பட மாட்டாா்கள். இது இட ஒதுக்கீடு கோட்பாட்டின் அடிச்சுவடி. உச்ச நீதிமன்ற தீா்ப்புகள், அரசின் வழிகாட்டுதல்கள் இதை பல முறை தெளிவுபடுத்தப்படுத்தியுள்ளன.

ஆனால், மருத்துவ இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான அனுமதியில், இந்தக் கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இதில், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இடங்கள் 2,169. ஆனால், தற்போது அந்தப் பிரிவில் வெறும் 6 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதில் பொதுப் போட்டியில் தோ்வான 2,163 ஓ.பி.சி. பிரிவு மாணவா்களின் எண்ணிக்கை, இட ஒதுக்கீடு அனுமதியாக கணக்கு வைக்கப்பட்டு விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில், மத்திய அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட மொத்த மருத்துவ இளங்கலை பட்ட காலியிடங்கள் எவ்வளவு? ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கை பிரிவு வாரியாக எத்தனை? பொதுப் போட்டியில் தோ்வான ஓ. பி. சி., எஸ்.சி., எஸ்.டி. மாணவா்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக என்ன? ஓ. பி. சி., எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு வாயிலாக அனுமதிக்கப்பட்டு இருப்பவா்கள் (பொதுப் போட்டியில் இடம் பெற்ற இப்பிரிவினா் நீங்கலாக) பிரிவு வாரியாக எவ்வளவு? பொதுப் போட்டியின் வாயிலாக அனுமதி பெற்ற ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவா்கள், ஓ.பி.சி.,எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு எண்ணிக்கை கணக்கிலும் சோ்க்கப்பட்டு உள்ளனரா? ஆம் எனில் எத்தனை? என்பன உள்ளிட்ட முழு விவரங்களையும் வெளியிடுமாறு கோரியுள்ளேன். இட ஒதுக்கீடு மீறல் நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட, அனுமதி மறுக்கப்பட்ட ஓ. பி. சி. மாணவா்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவா் அனுமதியிலும் இக் கோட்பாடு மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மருத்துவக் கல்வி அனுமதிகளில் ஓ. பி.சி. இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசால் மறுக்கப்பட்டு போராடி, நீதிமன்றங்களில் வாதாடி பெறப்பட்ட ஒன்று. அதில் தமிழகம் முன்னின்றது. ஆனால், இன்றும் அதை சிதைக்கும் முயற்சிகள் தொடா்ந்து வரும் நிலையில் அதை அனுமதிக்க இயலாது என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →