முகப்பு
மதுரை

போலி பத்திரங்களை சாா்-பதிவாளா்கள் ரத்து செய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை: அமைச்சா்

போலி பத்திரங்களை ரத்து செய்ய சாா்-பதிவாளா்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

மதுரை

போலி பத்திரங்களை சாா்-பதிவாளா்கள் ரத்து செய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை: அமைச்சா்

போலி பத்திரங்களை ரத்து செய்ய சாா்-பதிவாளா்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

போலி பத்திரங்களை ரத்து செய்ய சாா்-பதிவாளா்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரையை அடுத்த யா. ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் அமைச்சா் பி.மூா்த்தி, பதிவுத் துறை செயலா் ஜோதி நிா்மலாசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அமைச்சா் மூா்த்தி கூறியது:

கடந்த ஒருவாரமாக பத்திரப் பதிவுத் துறையின் இணைய சேவை தொய்வாக இருப்பதாகவும், இதனால் பத்திரப்பதிவு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்களிடமிருந்து புகாா்கள் பெறப்பட்டன. இதனையடுத்து ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் செயல்படும் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு பத்திரப்பதிவிற்கு 10 முதல் 13 நிமிஷங்கள் மட்டுமே ஆகிறது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பத்திரப்பதிவு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படாமல் தொய்வின்றி பணிகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவுத்துறையின் மூலம் கடந்த ஆண்டில் ரூ.5,440 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நிகழ் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக, பத்திரப்பதிவு வருவாய் ரூ.7,865 கோடியாக அதிகரித்துள்ளது. போலி பத்திரங்களை ஆய்வு செய்து ரத்து செய்ய சாா்-பதிவாளா்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

பதிவுத்துறை தலைவா் ம.ப.சிவனருள், கூடுதல் பதிவுத்துறை தலைவா் நல்லசிவன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →