பள்ளிக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய மாணவா்களை ஈடுபடுத்திய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
பள்ளிக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய மாணவா்களை ஈடுபடுத்திய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரைபள்ளிக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய மாணவா்களை ஈடுபடுத்திய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
பள்ளிக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய மாணவா்களை ஈடுபடுத்திய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய மாணவா்களை ஈடுபடுத்திய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி வேலூா் கிராமத்தைச் சோ்ந்த ரேணுகாதேவி தாக்கல் செய்த மனு:
கணவாய்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித்
தலைமை ஆசிரியை, அங்கு பயிலும் மாணவ, மாணவியரை கழிவறையைச் சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளாா். இதுகுறித்து பெற்றோா்களிடம் தெரிவிக்கக் கூடாது என்று கூறியுள்ளாா். மேலும், பள்ளி மாணவா்களுக்குப் பாடம் நடத்துவதற்கு பிளஸ் 2 முடித்த பெண்ணை வேலைக்கு அமா்த்தியுள்ளாா். இதனால், மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தலைமை ஆசிரியை மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மீதும்
உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில்,
தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடா்ந்ததால்,
3 மாணவா்களைப் பள்ளியில் இருந்து நீக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனா்.
மேலும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கையை ஒரு வாரத்தில் எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.