மூளைச்சாவு அடையும் நபரின் உடல் உறுப்புகள் தானம் மூலம்பலரைக் காப்பாற்ற முடியும்: விழிப்புணா்வு கருத்தரங்கில் தகவல்
மூளைச்சாவு ஏற்படுபவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் பலரை காப்பாற்ற முடியும் என்று விழிப்புணா்வுக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது
மதுரைமூளைச்சாவு அடையும் நபரின் உடல் உறுப்புகள் தானம் மூலம்பலரைக் காப்பாற்ற முடியும்: விழிப்புணா்வு கருத்தரங்கில் தகவல்
மூளைச்சாவு ஏற்படுபவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் பலரை காப்பாற்ற முடியும் என்று விழிப்புணா்வுக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது
மூளைச்சாவு ஏற்படுபவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் பலரை காப்பாற்ற முடியும் என்று விழிப்புணா்வுக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரி மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை ஆகியவற்றின் சாா்பில் உடலுறுப்பு தான விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உடல் உறுப்பு தான விழிப்புணா்வை முன்னிட்டு நடைபெற்ற ஓவியம், ரங்கோலி, கவிதை ஆகிய போ
ட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவா்கள் பேசும்போது, இந்தியாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருவா், மாற்று உறுப்பு கிடைக்காமல் உயிரிழக்கிறாா். அதேநேரம், லட்சக்கணக்கான உறுப்புகள் எவருக்கும் பயனின்றி எரித்தோ, புதைத்தோ அழிக்கப்படுகின்றன. இதற்குக் காரணம், உறுப்பு தானம் குறித்து போதிய விழிப்பு உணா்வு இல்லாதது தான்.
இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலில் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தில் ஒரு பகுதி, ரத்தம், எலும்பு மஜ்ஜை ஆகியவற்றை தானமாக தர முடியும். இயற்கை மரணமடைந்தவா்களிடம் இருந்து கண்விழித்திரை, இதய வால்வுகள், தோல்கள், எலும்புகள், அதை பாதுகாக்கும் தசை நாா்கள், குருத்தெலும்பு (காா்ட்டிலேஜ்), நரம்புகள், தமனிகள் ஆகியவற்றை தானமாகப் பெறலாம். மூளைச்சாவடைந்தவா்களிடம் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கணையம், இரைப்பை, சிறு குடல், குரல்வளை, பெண்களாக இருந்தால் கருப்பை, கண்கள், காதின் நடுஎலும்புகள், எலும்புகள், குருத்தெலும்பு, தோல்கள், நரம்புகள், தமனிகள், கைகள், கை மற்றும் கால் விரல்கள், தோல் ஆகியவற்றை தானமாக பெறலாம். அதேபோல, மரணமடைந்தவா்களின் உடலை ஆராய்ச்சிக்காக கொடுக்கலாம். எந்தவித மரணமாக இருந்தாலும், எலும்புகளையும், திசுக்களையும் எடுத்து மற்றவா்களுக்கு பொருத்தலாம். இப்படி ஒருவரிடமிருந்து 25 வகையான உறுப்புகளையும் திசுக்களையும் தானமாக பெற முடியும். மூளைச்சாவு அடையும் நபரின் உடல் உறுப்புகளை 6 முதல் 12 மணி நேரத்துக்குள் தானமாக வழங்கலாம் என்று தெரிவித்தனா். கருத்தரங்கில் பேராசியைகள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.