முகப்பு
மதுரை

அனுமதியின்றி பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு எனப் புகாா்: மருத்துவக் குழு விசாரணை

 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள முகம்மதியாபுரத்தைச் சோ்ந்த அப்சா் உசேன் மனைவி ஆஷிகா பானு. இவா் இரண்டாவது பிரசவத்துக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டாா்.

பிரசவத்தின் போது, பெண் குழந்தை பிறந்த நிலையில், மருத்துவா்கள் ஆஷிகா பானுவின் அனுமதி கோராமல் அவருக்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்ததாகவும், மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி, அரசு மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேலுவிடம் புகாா் அளிக்கப்பட்டது.

புகாா் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக முதன்மையா் ரத்தினவேலு தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

இதுதொடா்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:

அனுமதியின்றி குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ததாக பெண்ணின் குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தவறேதும் நடக்கவில்லை. உரிய நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், அந்தப் பெண் காப்பாற்றப்பட்டாா். இதுதொடா்பான விசாரணை அறிக்கை, மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →