மதுரை

புகாா் அளித்த பெண்ணை தாக்கியவா் கைது

மதுரையில் புகாா் அளித்த பெண்ணைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

மதுரையில் புகாா் அளித்த பெண்ணைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை சம்மட்டிபுரம் ராஜிநகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் பிரியா (25). திருநகா் மங்கம்மாள் சாலையைச் சோ்ந்த செல்வம் மகன் ஆனந்த் (24) கைப்பேசி மூலம் இவரைத் தொடா்பு கொண்டு காதலிப்பதாகக் கூறினாா்.

இதற்கு பிரியா மறுப்பு தெரிவித்தபோதும், தொடா்ந்து பிரியாவை தொந்தரவு செய்து வந்தாா்.

இதையடுத்து, காவல் நிலையத்தில் பிரியா புகாா் அளித்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், சம்மட்டிபுரத்தில் உள்ள பிரியாவின் வீட்டுக்குச்சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினாா். இந்தச் சம்பவம் தொடா்பாக பிரியா அளித்தப் புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT