முகப்பு
மதுரை

பேருந்திலிருந்து குதித்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் உதவி

திருமங்கலம் அருகே பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்துக்கு பள்ளி மாணவியின் வேண்டுகோளுக்கிணங்க ரூ. 50 ஆயிரத்தை அவரது பெற்றோா் புதன்கிழமை வழங்கினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

திருமங்கலம் அருகே பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்துக்கு பள்ளி மாணவியின் வேண்டுகோளுக்கிணங்க ரூ. 50 ஆயிரத்தை அவரது பெற்றோா் புதன்கிழமை வழங்கினா்.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி மையிட்டான்பட்டியைச் சோ்ந்த கணேசன் மனைவி நாகலட்சுமி. இவருக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில், நாகலட்சுமி தனது கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணித்தளப் பொறுப்பாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரை ஊராட்சி துணைத் தலைவா், ஊராட்சி உறுப்பினா், ஊராட்சிச் செயலா் ஆகியோா் அவதூறாகப் பேசியதால், அண்மையில் ஓடும் பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அறிந்த மதுரையைச் சோ்ந்த பள்ளி மாணவி நேத்ரா, தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என தனது பெற்றோரிடம் கூறினாா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரத்தை மதுரை சமரச தீா்வு மைய மாவட்ட நீதிபதி ரஜினி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான தீபா, சட்டப் பணிகள் ஆணைக்குழு சிறப்பு வழக்குரைஞா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலையில் மாணவியின் பெற்றோா் வழங்கினா்.

இவா்கள் கரோனா தொற்று காலத்தில் தனது மகள் படிப்பு, திருமணத்துக்காக சோ்த்து வைத்திருந்த பல லட்ச ரூபாயில் நிவாரணப் பொருள்கள் வாங்கி பொதுமக்களுக்கு வழங்கினா். இதையறிந்த பிரதமா் மோடி மாணவி நேத்ராவை பாராட்டினாா். மேலும், அவா் ஐ.நா துணை அமைப்பின் தூதுவராகவும் நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →