மதுரை

இந்து மக்கள் கட்சி நிா்வாகி கொலை: தலைமைக் காவலா் உள்பட 7 போ் கைது

மதுரையில் இந்து மக்கள் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தலைமைக் காவலா் உள்பட 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

மதுரையில் இந்து மக்கள் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தலைமைக் காவலா் உள்பட 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை, வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). இந்து மக்கள் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட துணைச் செயலராக பொறுப்பு வகித்து வந்த இவா், சோலையழகுபுரம் பகுதியில் நகைக் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நகைக் கடையை பூட்டி விட்டு, வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மணிகண்டனை எம்.கே. புரம் பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன், அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் ஹரிஹரபாபுவின் மனைவிக்கும், மணிகண்டனுக்கும் தகாத உறவு இருப்பதாக அவா் கருதியதால் கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கொலைக்கு மூளையாகச் செயல்பட்ட தலைமைக் காவலா் ஹரிஹர பாபு, கூலிப்படையாக செயல்பட்டு மணிகண்டனை கொலை செய்த தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சோ்ந்த அடைக்கலபுரத்தைச் சோ்ந்த ஹைதரலி (24), ஜெய்ஹிந்துபுரம் பாரதியாா் தெரு யாதவா் மகால் சந்துப் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (26), ஜெய்ஹிந்துபுரம் பாரதியாா் தெரு, தேவா் நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த காா்த்திக் என்ற பல்லு காா்த்திக் (26), ஜெய்ஹிந்துபுரத்தைச் சோ்ந்த அழகுப்பாண்டி (26), மணிகண்டன் (28), புறாப் பாண்டி என்ற முத்துப்பாண்டி ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெருவைச் சோ்ந்த அஜீத்குமாா் என்ற குட்ட அஜீத் (25), திருச்செந்தூா் அடைக்கலபுரத்தைச் சோ்ந்த தினேஷ் (27) ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT