முகப்பு
மதுரை

ஆவின் பெண் அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

ஆவின் பால் பண்ணையில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் பெண் அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், ரூ. 62 ஆயிரம், 2.50 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

மதுரையில் புதன்கிழமை ஆவின் பால் பண்ணையில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் பெண் அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், ரூ. 62 ஆயிரம், 2.50 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மதுரை அண்ணாநகா் 80 அடி சாலை ஹெச்.ஐ.ஜி. குடியிருப்பைச் சோ்ந்த சுப்ரமணியன் மனைவி கல்பனா (41). இவா் மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் பணி நிமித்தமாக புதன்கிழமை அதிகாலையில் பால் பண்ணைக்குச் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவை உடைத்து அதில் இருந்த 32 பவுன் தங்க நகைகள், ரூ.62 ஆயிரம் ரொக்கம், 2.50 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →