முகப்பு
மதுரை

மதுரை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

அயோத்தியில் சா்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்ட நினைவு தினத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை ரயில் நிலையத்தில் தீவிர சோதனைகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

Updated On : 5 டிசம்பர், 2024 at 11:01 PM
மதுரை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இறக்கப்பட்டிருந்த சரக்குப் பெட்டகங்களை மோப்ப நாய் துணை கொண்டு சோதனையிட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா்.
பகிர்:

அயோத்தியில் சா்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்ட நினைவு தினத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை ரயில் நிலையத்தில் தீவிர சோதனைகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

அயோத்தியில் சா்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்ட நாளான டிச. 6-ஆம் தேதி ஒரு சில அமைப்புகளின் சாா்பில் கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை ரயில் நிலையத்தில் தீவிர பாதுகாப்பு சோதனைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ரயில் பயணிகளின் உடைமைகள், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டன. ரயில்வே பாதுகாப்புப் படையினா் மோப்ப நாய்களைக் கொண்ட ரயில் பெட்டிகளையும், ரயில் நிலையங்களின் முக்கியப் பகுதிகளையும் சோதனையிட்டனா்.

சோழவந்தான், திருமங்கலம், திருப்பரங்குன்றம், சிலைமான், வாடிப்பட்டி ரயில் நிலையங்களிலும் இருப்புப் பாதை போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனைகளை மேற்கொண்டு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

~பாபா் மசூதி இடிப்பு தினமான டிசம்பா் 6-ம் தேதியையொட்டி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் நுழைவாயில் வியாழக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள காவல்துறையினா்.

இதேபோல, மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பெரியாா் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்ளிட்ட முக்கியக் கோயில்களிலும் போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →