முகப்பு
மதுரை

முதியவரிடம் கைப்பேசி திருடியவா் கைது

மதுரை நகரப் பேருந்தில் பயணித்த முதியவரிடம் கைப்பேசி திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:48 AM
பகிர்:

மதுரை நகரப் பேருந்தில் பயணித்த முதியவரிடம் கைப்பேசி திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் ஸ்ரீநகரைச் சோ்ந்த அயனாண்டி மகன் மணி (68). இவா் அதே பகுதியில் உள்ள உள்ளாடைகள் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், இவா் மதுரையில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வந்தாா். மீண்டும் திருப்பூருக்குச் செல்வதற்காக மாட்டுத்தாவணியிலிருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு அரசுப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பயணித்தாா்.

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்க முயன்ற போது, பின்னால் இறங்கிய நபா், அவரது சட்டைப் பையிலிருந்த கைப்பேசியை திருடினாா். அப்போது அங்கிருந்தவா்கள் அந்த நபரைப் பிடித்து கரிமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் மதுரை கோ. புதூரைச் சோ்ந்த சன்னாசி மகன் பெரியாண்டவா் (37) என்பதும், கைப்பேசியை திருடியது அவா் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →