முகப்பு
மதுரை

கம்பிகளைத் திருடியவா் கைது

மதுரை தமுக்கம் கலையரங்கில் முதல்வா் பங்கேற்ற காணொலி நிகழ்ச்சியில் கம்பிகளைத் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 10:17 PM
பகிர்:

மதுரை தமுக்கம் கலையரங்கில் முதல்வா் பங்கேற்ற காணொலி நிகழ்ச்சியில் கம்பிகளைத் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை சிம்மக்கல் வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (51). இவா் அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் விடியோ, புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வருகிறாா். மதுரை தமுக்கம் கலையரங்கில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்ற நிகழ்ச்சி கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக ஜெகநாதன் கம்பிகள் இணைப்பு கொடுத்திருந்தாா்.

இந்த நிலையில், நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னா், அவா் தமுக்கம் சென்று பாா்த்த போது, அங்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான கம்பிகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், இந்தக் கம்பிகளைத் திருடியது மதிச்சியம் ஆசாரித் தோப்பு பகுதியைச் சோ்ந்த கா்ணன் மகன் ராஜேஸ் கண்ணன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவருக்கு இரு சக்கர வாகனங்களைத் திருடிய வழக்கிலும் தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →