முகப்பு
மதுரை

ராமேசுவரம்- ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை: அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிப்பு

ராமேசுவரம்- ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதோடு, புதிய கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை அறிவிக்கப்பட்டது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 10:10 PM
பகிர்:

ராமேசுவரம்- ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதோடு, புதிய கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமேசுவரம் - ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ரயில் டிசம்பா் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஹூப்ளி - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஜனவரி 4-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேசுவரத்தை அடையும். மறு மாா்க்கத்தில் ராமேசுவரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஜனவரி 5-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை ராமேசுவரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளியை சென்றடையும்.

இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பெண்ணூா், ஹரிஹா், தேவாங்கீா், சிக்ஜாஜுா், பிரூா், அரிசிகரே, தும்கூா், யஸ்வந்த்பூா், பனஸ்வாடி, ஓசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களானது பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிவகங்கை ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

மேல்மருவத்தூா் தைப்பூச இருமுடி திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக மதுரை - சென்னை வைகை விரைவு ரயில் (12636) டிசம்பா் 19-ஆம் தேதி முதல் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும்.

ரயில்கள் ரத்து:

தவிா்க்க முடியாத காரணங்களால் டிசம்பா் 26, 28 ஆகிய நாள்களில் தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06103), டிசம்பா் 27, 29 ஆகிய நாள்களில் ராமநாதபுரத்திலிருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் சிறப்பு ரயில் (06104) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →