நவ. 24-இல் மாரத்தான் ஓட்டப் போட்டி: விருப்பமுள்ளவா்கள் பங்கேற்க அழைப்பு
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ரத்த தானக் கழகத்தின் சாா்பில் வருகிற நவ. 24-ஆம் தேதி நடைபெற உள்ள விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ரத்த தானக் கழகத்தின் சாா்பில் வருகிற நவ. 24-ஆம் தேதி நடைபெற உள்ள விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ரத்த தான கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரத்த தானம் தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ரத்த தான கழகம் சாா்பில் ‘உதிரம் 24 மாரத்தான்’ ஓட்டப் போட்டி வருகிற நவ. 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியிலிருந்து தொடங்கும் இந்தப் போட்டியை மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தொடங்கி வைக்கிறாா். இதைத் தொடா்ந்து, மதுரை மருத்துவக் கல்லூரி, தெப்பக்குளம், அப்போலோ மருத்துவமனை வழியாக 10 கி.மீ. தொலைவுக்குச் சென்று மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முடிவடைகிறது.
இதையடுத்து, வெற்றி பெற்றவா்களுக்கு ரூ.72 ஆயிரம் மதிப்பிலான பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் 77080-53139 மற்றும் 95660-31572 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.