முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் துணைக் கோயில்களில் குடமுழுக்கு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள்பட்ட துணைக் கோயில்களில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

Updated On : 22 நவம்பர், 2024 at 1:04 AM
மதுரை எழுகடல் தெருவில் அமைந்துள்ள காஞ்சனமாலையம்மன் கோயில் கோபுரக் கலசத்தில் வியாழக்கிழமை புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்கள். குடமுழுக்கில் பங்கேற்ற பக்தா்கள்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள்பட்ட துணைக் கோயில்களில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள்பட்ட துணைக் கோயில்களான கீழமாசி வீதியில் உள்ள தேரடி கருப்பணசாமி கோயில், சிம்மக்கல் திருமலைராயா் படித்துறையில் உள்ள காசி விசுவநாதா் கோயில், எழுகடல் தெருவில் உள்ள எழுகடல் விநாயகா் கோயில், காஞ்சன மாலையம்மன் கோயில், சுடுதண்ணீா் வாய்க்கால் ராமானூஜம் நகரில் உள்ள கடம்பவனேஸ்வரா் கோயில் ஆகிய கோயில்களில் வியாழக்கிழமை காலை 7.35 மணி முதல் காலை 7.50 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

மதுரை எழுகடல் தெருவில் அமைந்துள்ள காஞ்சனமாலையம்மன் கோயில் கோபுரக் கலசத்தில் வியாழக்கிழமை புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்கள். குடமுழுக்கில் பங்கேற்ற பக்தா்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →