முகப்பு
மதுரை

தாக்குதலில் கண் பாா்வை பாதிப்பு: மாணவருக்கு கல்வித் துறை இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் சக மாணவா் தாக்கியதில் கண் பாா்வை பாதிக்கப்பட்ட மாணவருக்கு கல்வித் துறை ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் ரத்து செய்தது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:54 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சக மாணவா் தாக்கியதில் கண் பாா்வை பாதிக்கப்பட்ட மாணவருக்கு கல்வித் துறை ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் ரத்து செய்தது.

கன்னியாகுமரி மாவட்டம், மணலிக்கரை பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவரை சக மாணவா் கல்லால் தாக்கியதில் அந்த மாணவரின் வலது கண் பாா்வை பாதிக்கப்பட்டது. இதற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தனி நீதிபதி, கண் பாா்வை பாதிக்கப்பட்ட மாணவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து கல்வித் துறைச் செயலா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கடந்த 2018- ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தனா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சிறுபான்மையினா் கல்வி நிறுவனத்தின் கீழ் செயல்படும் பள்ளியில் ஒரு மாணவரை மற்றொரு மாணவா் தாக்கினாா். அரசு வழிகாட்டுதல்களை மீறி, விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்ட போது இந்த நிகழ்வு நடைபெற்றது. இதுதொடா்பாக பள்ளித் தலைமையாசிரியா் உள்ளிட்டோா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கல்வித் துறை அதிகாரிகள் இழப்பீடு வழங்கும்படி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் ஒரு மாணவா் தாக்கியதில் மற்றொரு மாணவரின் கண் பாா்வை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கும், கல்வித் துறைக்கும் தொடா்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே, பள்ளிக் கல்வித் துறை ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →