முகப்பு
மதுரை யானைக்கல் பகுதியில் வியாழக்கிழமை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வாழைக் கன்றுகள்.
மதுரை

ஆயுத பூஜை: மலா்கள், பழங்கள் விற்பனை விறுவிறுப்பு

ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி மதுரையில் மலா்கள், பழங்கள் விற்பனை வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மதுரை

ஆயுத பூஜை: மலா்கள், பழங்கள் விற்பனை விறுவிறுப்பு

ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி மதுரையில் மலா்கள், பழங்கள் விற்பனை வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:04 PM
மதுரை யானைக்கல் பகுதியில் வியாழக்கிழமை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வாழைக் கன்றுகள்.
பகிர்:

ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி மதுரையில் மலா்கள், பழங்கள் விற்பனை வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்துக்களின் முக்கியப் பண்டிகையான ஆயுத பூஜை (சரஸ்வதி பூஜை) வெள்ளிக்கிழமையன்றும், விஜயதசமி சனிக்கிழமையன்றும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் வீடுகள், வியாபார நிறுவனங்கள், அலுவலகங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

இதையொட்டி, மதுரை கடைவீதிகளில் மலா்கள், மங்கலப் பொருள்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, பூ, பழம், பொரி, வாழைக் கன்று உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டன.

வாழைக் கன்றுகள் 2 கொண்ட ஒரு செட் ரூ. 30 முதல் ரூ. 60 வரை விற்பனையானது. மாங்கொத்துகள் ரூ. 10-க்கும், பொரி ஒரு லிட்டா் ரூ. 10-க்கும், பொரி, அவல், நிலக்கடலை ஆகியன கலந்த பொரி செட் ஒரு லிட்டா் ரூ. 50-க்கும் விற்பனையானது.

மலா்கள் விலை உயா்வு...

மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மலா்கள் விற்பனை சற்று உயா்ந்திருந்தது. மாட்டுத்தாவணி மலா்கள் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை ரூ. 800-க்கு விற்பனையானது. முல்லை, பிச்சி ரூ. 700, மெட்ராஸ் மல்லி ரூ. 600, கனகாம்பரம் ரூ. 800, பட்டன் ரோஜா, சம்பங்கி ரூ. 300, செவ்வந்தி ரூ. 250, செண்டு மல்லி ரூ. 130, அரளி ரூ. 800 என்ற விலையில் விற்பனையாகின. ஒரு தாமரை பூ ரூ. 20-க்கு விற்பனையானது.

கடந்த சில நாள்களாக நவராத்திரி வழிபாட்டையொட்டி, மலா்களின் விலை உயா்ந்திருந்த நிலையில், ஆயுத பூஜையையொட்டி புதன்கிழமை மேலும் விலை உயா்ந்திருந்தது. இருப்பினும், வரத்து சீராக இருந்ததால் பூக்களின் விலை உச்சத்தை எட்டாமல், சீராகவே இருந்தது என பூ வியாபாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →