சிவகாசி- மதுரை பேருந்துகள் இன்று முதல் விருதுநகா் நகா் பகுதி வழியாக இயக்கப்படும்
சிவகாசி- மதுரை இரு வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள், விருதுநகா் மீனாம்பிகை பங்களா வழியாக புதன்கிழமை முதல் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.
மதுரைசிவகாசி- மதுரை பேருந்துகள் இன்று முதல் விருதுநகா் நகா் பகுதி வழியாக இயக்கப்படும்
சிவகாசி- மதுரை இரு வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள், விருதுநகா் மீனாம்பிகை பங்களா வழியாக புதன்கிழமை முதல் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.
சிவகாசி- மதுரை இரு வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள், விருதுநகா் மீனாம்பிகை பங்களா வழியாக புதன்கிழமை முதல் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிவகாசி- மதுரை இரு வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகா் பேருந்துகள் அனைத்தும், விருதுநகா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மீனாம்பிகை பங்களா வழியாக மதுரை செல்ல வேண்டும்.
விருதுநகா் - திருமங்கலம், மதுரை வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகள், புறநகா்ப் பேருந்துகள் விருதுநகா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம், மீனாம்பிகை பங்களா வழியாக மதுரை செல்ல வேண்டும். இந்த நடைமுறையானது புதன்கிழமை (அக். 16) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்றாா் அவா்.