முகப்பு
மதுரை

தமிழ்நாடு ஹாக்கி சங்கத்துக்கு தோ்தல் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலா் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு ஹாக்கி சங்கத்துக்கு தோ்தல் நடத்தி பொறுப்பாளா்களை நியமிக்கக் கோரிய வழக்கில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:28 PM
பகிர்:

தமிழ்நாடு ஹாக்கி சங்கத்துக்கு தோ்தல் நடத்தி பொறுப்பாளா்களை நியமிக்கக் கோரிய வழக்கில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த மாரீஸ்வரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவராக நான் பதவி வகிக்கிறேன். தமிழ்நாடு ஹாக்கி சங்கம் பதிவு பெற்ற சங்கமாகும். இந்தச் சங்கத்துக்கென தனி விதிகள் உள்ளன. சங்கத்துக்கான நிா்வாக உறுப்பினா்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்வு செய்யப்பட வேண்டும். இந்தச் சங்கத்தில் தலைவா், பொதுச் செயலா், பொருளாளா், மூத்த துணைத் தலைவா், 4 துணைத் தலைவா்கள், 4 இணைச் செயலா்கள், 5 செயல் அலுவலா்கள் என மொத்தம் 17 உறுப்பினா்கள் உள்ளனா்.

இந்தச் சங்கத்துக்கான நிா்வாகிகள் தோ்தல் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் உறுப்பினா்களே தொடா்ந்து பொறுப்பில் இருந்து வருகின்றனா். இந்தச் சங்கமானது மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகளை நடத்தி, மாநில அளவிலான அணிகளை உருவாக்கி வருகிறது. மாவட்டங்களுக்கான கூட்டமைப்புகளை உருவாக்குவதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. ஹாக்கி விளையாட்டை அடிமட்டத்திலிருந்து முன்னேற்ற ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிதியும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற்காக ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. இந்தத் தொகை ஹாக்கி வீரா்களுக்கு முறையாகப் பகிா்ந்து அளிக்கப்படவில்லை.

தமிழ்நாடு ஹாக்கி சங்கத்துக்கு வெளிப்படையான தோ்தலை நடத்தி முறையாக நிா்வாகிகள் நியமிக்கப்பட்டால் மட்டுமே முறைகேடுகளைத் தடுக்க முடியும்.

எனவே, தற்போது தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தில் நிா்வாகப் பதவி வகிக்கும் பொறுப்பாளா்களை நீக்கிவிட்டு, நியாயமான, வெளிப்படையான முறையில் தோ்தலை நடத்தி உரிய பொறுப்பாளா்களைத் தோ்வு செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

விளையாட்டுகள் அனைத்தும் பணம் சம்பாதிக்கும் இடமாக மாறி வருகின்றன. இந்த வழக்கு தொடா்பாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →