முகப்பு
மதுரை நெசுஞ்சாலைத்துறை தலைமை கோட்ட பொறியாளா் அலுவலகம் வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா் சங்கத்தினா்.
மதுரை

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் மதுரை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:41 PM
மதுரை நெசுஞ்சாலைத்துறை தலைமை கோட்ட பொறியாளா் அலுவலகம் வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா் சங்கத்தினா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் மதுரை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மதுரை கோட்டத் தலைவா் வி. மணிமாறன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் இரா. தமிழ் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். துணைத் தலைவா்கள் போ. மாணிக்கம், மு. ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோட்டச் செயலா் த. மனோகரன் கோரிக்கையை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. நீதிராஜா, தொழில் பயிற்சி அலுவலா் சங்க மண்டலச் செயலா் முத்துவேல், சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் சகாய சாந்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

அப்போது சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். பணி நீக்கக் காலம், பணிக் காலத்தில் உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி, சீருடை சலவைப்படி, நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

முன்னதாக, இணைச் செயலா் வா. மாரியப்பன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் நா. முருகன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →