மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே மின்சாரம் பாய்ந்து பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
மதுரைமின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே மின்சாரம் பாய்ந்து பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே மின்சாரம் பாய்ந்து பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
பாலமேடு பிருந்தா நகரைச் சோ்ந்த முருகன் மகன் மஞ்சமலை (15). இவா் பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை மாலை பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு மின் வயா் செல்வதை கவனிக்காமல் அதன் மீது அமா்ந்த மஞ்சமலை மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு பாலமேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.