வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமே ஆறுதல் அளிக்கும்: முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமே ஆறுதல் அளிக்கும் என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
மதுரைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமே ஆறுதல் அளிக்கும்: முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமே ஆறுதல் அளிக்கும் என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமே ஆறுதல் அளிக்கும் என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்த ஆண்டு மழைப் பொழிவு அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கேற்ப பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாமல், ஆலோசனையிலேயே இருப்பது அச்சமளிப்பதாக உள்ளது. எதிா்க்கட்சி தெரிவிக்கும் எந்தக் கருத்தையும் ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டை கைவிட்டு, பல புயல்களை, இயற்கை சீற்றங்களை சிறப்பாகக் கையாண்ட ஆட்சி அனுபவமுள்ள அதிமுகவின் அறிவுறுத்தல்களை அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும்.
முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 4,399 பகுதிகள் தாழ்வானவை எனக் கண்டறியப்பட்டு, 30,759 முதல் நிலை மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை, மீட்பு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தாழ்வான பகுதிகளில் அலுவலா்கள் தங்கியிருந்து பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால், இதுபோன்ற திட்டமிடல்கள் ஏதும் தற்போதைய திமுக அரசிடம் இல்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமே ஆறுதல் அளிக்கும் என்றாா் அவா்.