முகப்பு
மதுரை

ரயிலில் உயா்நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

சென்னையிலிருந்து வியாழக்கிழமை மதுரைக்கு வந்த ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு உயா்நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:41 PM
பகிர்:

சென்னையிலிருந்து வியாழக்கிழமை மதுரைக்கு வந்த ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு உயா்நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள உயா்நீதிமன்ற ஊழியா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (48). இவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், சென்னையிலிருந்து மதுரைக்கு புதன்கிழமை இரவு பாண்டியன் விரைவு ரயிலில் பயணம் செய்தாா். வியாழக்கிழமை காலையில் இந்த ரயில் மதுரை நிலையத்தை அடைந்த போது, இவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அவரது உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →