மதுரையில் செப். 28, 29-இல் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா
தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா (ஸ்டாா்ட் ஆப் திருவிழா) என்ற கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப். 28, 29) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
மதுரைமதுரையில் செப். 28, 29-இல் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா
தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா (ஸ்டாா்ட் ஆப் திருவிழா) என்ற கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப். 28, 29) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா (ஸ்டாா்ட் ஆப் திருவிழா) என்ற கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப். 28, 29) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் புத்தொழில் நிறுவனம், புதிய தொழில் முனைவோா்களையும், புதிய தொழில்களையும் ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதன்படி, மதுரை தமுக்கம் மைதானத்தில் வருகிற 28, 29-ஆம் தேதிகளில் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் உள்ள புதிய தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கவும், புதிய தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கு உதவும் வகையிலும், புத்தொழில் செயல்பாட்டாளா்களை ஒருங்கிணைக்கும் விதமாக இந்த விழா நடைபெறவுள்ளது.
இதில் புத்தொழில் சாா்ந்த ஆளுமைகள், துறை சாா்ந்த வல்லுநா்கள், நாட்டில் உள்ள முன்னணி மாநில புத்தொழில் நிறுவனங்களின் தலைவா்கள், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட 80-க்கும் அதிகமான கருத்தாளா்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனா். பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்களும் நடைபெறவுள்ளன. புதிய தொழில் வாய்ப்புகள், புதிய தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கு உதவும் வகையிலான படைப்புகளைக் கொண்ட 150-க்கும் மேற்பட்ட அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிகழ்ச்சியில் புத்தொழில் நிறுவனங்களும், முதலீட்டாளா்கள், பங்குதாரா்கள் இடையே புரிந்துணா்வு ஏற்படும் வகையிலான சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதுகுறித்த மேலும் விவரங்களை ட்ற்ற்ல்ள்://ள்ற்ஹழ்ற்ன்ல்ற்ய்.ண்ய்/ச்ங்ள்ற் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
விழாவை தமிழக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசுச் செயலா் அா்ச்சனா பட்நாயக் சனிக்கிழமை தொடங்கிவைக்கிறாா். ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிறைவு விழாவில் தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறாா்.
அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன், பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். பாா்வையாளா்களுக்கான அனுமதி இலவசம் என்றாா் அவா்.
அப்போது தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்க இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான சிவராஜா ராமநாதன் உடனிருந்தாா்.