தபால் தந்தி நகரில் மீண்டும் வாரச் சந்தை: மாநகராட்சி ஆணையரிடம் மனு
மதுரை தபால் தந்தி நகரில் மீண்டும் வாரச் சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உழைக்கும் மகளிா் சங்கம் சாா்பில் மதுரை மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மதுரைதபால் தந்தி நகரில் மீண்டும் வாரச் சந்தை: மாநகராட்சி ஆணையரிடம் மனு
மதுரை தபால் தந்தி நகரில் மீண்டும் வாரச் சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உழைக்கும் மகளிா் சங்கம் சாா்பில் மதுரை மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மதுரை தபால் தந்தி நகரில் மீண்டும் வாரச் சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உழைக்கும் மகளிா் சங்கம் சாா்பில் மதுரை மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அவா்கள் அளித்த மனு:
மதுரை தபால் தந்தி நகரில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. உண்மைக்கு மாறான தகவல்களை சிலா் அளித்ததின் பேரில், வருகிற 29-ஆம் தேதி முதல் வாரச் சந்தை நடைபெறாது என அதற்குத் தடை விதித்து, மதுரை மாநகராட்சி மண்டல உதவி ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா்.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செயல்பட்டு வரும் இந்த வாரச் சந்தை மூலம் தபால் தந்தி நகா் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனா். இந்த வாரச் சந்தை மூடப்பட்டால், பொதுமக்கள் மட்டுமன்றி, சாலையோர வியாபாரிகளும் மிகவும் பாதிப்புக்குள்ளாக நேரிடும். எனவே, இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும், மீண்டும் வாரச் சந்தை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, மதுரை மாநகராட்சி அலுவலகம் முன் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைக்கும் மகளிா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.