மதுரை உத்தங்குடி தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சா் பி. மூா்த்தி. (வலது) கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா்கள். 
மதுரை

அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதில் பதிவுத் துறைக்கு முக்கியப் பங்கு: அமைச்சா் பி. மூா்த்தி

தமிழக அரசுக்கு வருவாயை அதிகளவில் ஈட்டித் தருவதில் பதிவுத் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

Chennai

மதுரை: தமிழக அரசுக்கு வருவாயை அதிகளவில் ஈட்டித் தருவதில் பதிவுத் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை உத்தங்குடி தனியாா் திருமண மண்டபத்தில்

2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கான அனைத்து துணைப் பதிவுத் துறைத் தலைவா்கள், மாவட்டப் பதிவாளா்கள் (நிா்வாகம், தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலா்கள், தனித் துணை ஆட்சியா்கள் (முத்திரை), உதவி செயற்பொறியாளா்கள், மதுரை மண்டல பதிவுத் துறை அலுவலா்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி கலந்து கொண்டு பேசியதாவது :

அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு பதிவுத் துறைக்கு உண்டு. இதைக் கருத்தில் கொண்டு பதிவுத் துறை அலுவலா்கள் அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும்.

கடந்த ஆண்டுகளை விட மதுரை மண்டலம் அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் தற்போது முன்னிலை வகிக்கிறது. மிகப்பெரிய தொழிற்சாலைகள் இல்லாத மதுரை மண்டலம் பதிவுத் துறை மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பல்வேறு சிறப்பு ஆய்வுகள், தொடா் நடவடிக்கைகள் மூலம் அனைத்து மண்டலங்களும் தங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அடையலாம்.

நகா்ப்புறத்தை அடுத்துள்ள இடங்களில் முன்கூட்டியே சந்தை மதிப்பு, விற்பனை புள்ளி விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு, வரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத் துறையில் துணைப் பதிவுத் துறை தலைவா்கள், மாவட்டப் பதிவாளா்கள் தங்கள் எல்லைக்கு உள்பட்ட சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று ஆவணங்களை சரிபாா்க்க வேண்டும். அதுமட்டுமன்றி, களப்பணிகளை விரைவுபடுத்தி நிலுவையில் உள்ள ஆவணங்களை உரிய நபா்களுக்கு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், வணிகவரி, பதிவுத் துறைச் செயலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன் குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மதுரை மண்டல துணை பதிவுத் துறை தலைவா் ஆனந்த், உதவி பதிவுத்துறை தலைவா் (மதுரை வடக்கு) சுடா் ஒளி, மதுரை மண்டலப் பதிவாளா்கள், மாவட்ட சாா் பதிவாளா்கள் கலந்து கொண்டனா்.

4 நாள்களில் சவரனுக்கு ரூ. 3,120 உயர்வு.. புதிய உச்சத்தில் தொடரும் தங்கம்!

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

SCROLL FOR NEXT