அரசின் பொங்கல் போனஸ் அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது: தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம்
அரசின் பொங்கல் போனஸ் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் தெரிவித்தது.
அரசின் பொங்கல் போனஸ் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் தெரிவித்தது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சு. தமிழ்ச்செல்வி, பொதுச் செயலா் சு. ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை :
மத்திய அரசு 2006-ஆம் ஆண்டு வெளியிட்ட திருத்தப்பட்ட போனஸ் சட்டப்படி, ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியா்களுக்கு ரூ. 7 ஆயிரம் போனஸ் வழங்கப்படுகிறது. இதைப் பின்பற்றி தமிழக அரசும், மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பொங்கல் போனாஸாக ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தியது.
இந்த நிலையில், மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பொங்கல் போனஸாக ரூ. 3 ஆயிரம் மட்டும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வேதனையும், ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளது. எனவே, தமிழக அரசு போனஸ் அறிவிப்பை மறு பரிசீலனை செய்து, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு, தொகுப்பூதிய பணியாளா்களுக்கு ரூ. 7 ஆயிரம் போனஸ் வழங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், ஏ, பி பிரிவு அலுவலா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட கருணைத் தொகை, தொகுப்பூதியம் ஆகியவற்றையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனகேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆசிரியா் கூட்டணி...
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் தெரிவித்திருப்பது :
மாநில அரசு ஊழியா்களுக்கு ரூ. 3 ஆயிரம்தான் போனஸ் என்பது பாரபட்சமான நிலைப்பாடு. இது, ஆசிரியா்கள், அரசு ஊழியா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ரூ. 7 ஆயிரம் போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.